வாசகர்கள் கருத்துகள் ( 2 )
The stadium is in South California and not South Carolina as mentioned in the news item
எல்லாம் இருக்கட்டும், டிரம்ப் ஐயா எவ்வளவு tax போடுவார். போட்டியை எதனை நாடுகள் புறக்கணிக்கும்?
துபாய்: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கரோலினாவில் நடக்கவுள்ளன.பாரிஸ் ஒலிம்பிக்கில் (1900) முதல் மற்றும் கடைசியாக கிரிக்கெட் போட்டி நடந்தது. சமீபத்திய 'டி-20' போட்டி வருகைக்குப் பின், 2010, 2014, 2023 ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. 2022 காமன்வெல்த் (பர்மிங்காம்) விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டும் இடம் பிடித்தது.இந்த வரிசையில் 128 ஆண்டுக்குப் பின், வரும் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் ('டி-20') சேர்க்கப்பட்டது.இப்போட்டி நடக்கும் இடம் குறித்த அறிவிப்பு வெளியானது. பிரதான மைதானம் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்சில் இருந்து 48 கி.மீ., துாரத்தில் உள்ள தெற்கு கரோலினாவின் பொமோனாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன.இங்குள்ள மைதானத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு மாநாடு, கல்வி, வர்த்த கண்காட்சிகள், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடக்கும். இதுவரை கிரிக்கெட்டுக்கு என இங்கு மைதானம் இல்லை. ஒலிம்பிக் போட்டிக்காக ஸ்பெஷலாக கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா கூறுகையில்,'' லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடக்கவுள்ள இடம் குறித்து அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி,'' என்றார்.கிரிக்கெட் தவிர மற்ற போட்டிகள் மொத்தம் 8 இடங்களில் நடக்க உள்ளன.
The stadium is in South California and not South Carolina as mentioned in the news item
எல்லாம் இருக்கட்டும், டிரம்ப் ஐயா எவ்வளவு tax போடுவார். போட்டியை எதனை நாடுகள் புறக்கணிக்கும்?