உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: மேக்ஸ்வெல் அபாரம்

ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: மேக்ஸ்வெல் அபாரம்

பிரிஸ்பேன்: முதல் 'டி-20' போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. மழையால் தலா 7 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ ஷார்ட் (7), ஜேக்-பிரேசர் மெக்குர்க் (9), டிம் டேவிட் (10) ஏமாற்றினர். மேக்ஸ்வெல், 19 பந்தில் 43 ரன் (3 சிக்சர், 5 பவுண்டரி) விளாசினார். ஆஸ்திரேலிய அணி 7 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 93 ரன் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (21) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் அபாஸ் அப்ரிதி 2 விக்கெட் வீழ்த்தினார்.சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் (0), பாபர் ஆசம் (3), உஸ்மான் கான் (4), சல்மான் ஆகா (4), இர்பான் கான் (0) ஏமாற்றினர். பாகிஸ்தான் அணி 7 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 64 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அபாஸ் அப்ரிதி (20) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை மேக்ஸ்வெல் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ