உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது பாகிஸ்தான்: இங்கிலாந்து மீண்டும் தோல்வி

கோப்பை வென்றது பாகிஸ்தான்: இங்கிலாந்து மீண்டும் தோல்வி

ராவல்பிண்டி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் அசத்திய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 267, பாகிஸ்தான் 344 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 24/3 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் (33), ஹாரி புரூக் (26) ஆறுதல் தந்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (3), ஜேமி ஸ்மித் (3) ஏமாற்றினர். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 112 ரன்னுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 6, சஜித் கான் 4 விக்கெட் சாய்த்தனர்.பின் 36 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் (8) ஏமாற்றினார். சோயப் பஷீர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ஷான் மசூது வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 37/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அப்துல்லா ஷபிக் (5), மசூது (23) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தானின் சவுத் ஷகீல் வென்றார். தொடர் நாயகன் விருதை பாகிஸ்தானின் சஜித் கான் (19 விக்கெட், 72 ரன்) கைப்பற்றினார்.2021க்கு பின்...பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 3 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடைசியாக 2021ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை 2-0 என வென்றிருந்தது. அதன்பின் பங்கேற்ற 4 டெஸ்ட் தொடரில், மூன்றில் (எதிர்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம்) ஏமாற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் சமன் ஆனது.* தவிர, ஒன்பது ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது. கடைசியாக 2015ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது பாகிஸ்தான். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்ற 2 தொடர் சமன் (2016, 2018) ஆனது. இரண்டில் (2020, 2022) தொடரை பறிகொடுத்தது.39 விக்கெட்கடைசி இரு டெஸ்டில் 'சுழலில்' அசத்திய பாகிஸ்தானின் நோமன் அலி (20), சஜித் கான் (19) இணைந்து மொத்தம் 39 விக்கெட் சாய்த்தனர். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 16 விக்கெட் (3 டெஸ்ட்) கைப்பற்றினார்.373 ரன்அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் (373 ரன்), ஜோ ரூட் (352) முதலிரண்டு இடங்களை கைப்பற்றினர். பாகிஸ்தான் சார்பில் சவுத் ஷகீல் 280 ரன் விளாசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை