உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: இங்கிலாந்து அணி தடுமாற்றம்

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: இங்கிலாந்து அணி தடுமாற்றம்

ராவல்பிண்டி: மூன்றாவது டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் அசத்த, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 267 ரன் மட்டும் எடுத்தது.பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. ராவல்பிண்டியில் மூன்றாவது, கடைசி டெஸ்ட் நடக்கிறது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த போது கிராலே (29) அவுட்டானார். சஜித் கான் 'சுழலில்' போப் (3), ஜோ ரூட் (5), ஹாரி புரூக் (5), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (12) சிக்கினர். பொறுப்பாக ஆடிய டக்கெட் (52) அரைசதம் கடந்தார். அட்கின்சன் (39) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய ஜேமி ஸ்மித், 119 பந்தில் 89 ரன் (6 சிக்சர், 5 பவுண்டரி) விளாசினார். தொடர்ந்து அசத்திய சஜித் கான் பந்தில் ரேஹன் அகமது (9), ஜாக் லீச் (16) அவுட்டாகினர்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 267 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6, நோமன் அலி 3 விக்கெட் சாய்த்தனர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் (14), சைம் அயூப் (19), கம்ரான் குலாம் (3) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 73/3 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஷான் மக்சூத் (16), சவுத் ஷகீல் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ