மேலும் செய்திகள்
திக்வேஷ் ரதிக்கு அபராதம்
02-Apr-2025
இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்
07-Apr-2025
முல்லன்புர்: பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.பஞ்சாப் மாநிலம் முல்லன்புரில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப் அணி (219/6), 18 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை (201/5) வென்றது. இப்போட்டியில் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல், மைதானத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தினார். நடத்தை விதிகளை மீறியதற்காக இவருக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது.ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' மேக்ஸ்வெல் 36, நடப்பு பிரிமியர் லீக் தொடரில் பேட்டிங் (31 ரன்), பவுலிங்கில் (3 விக்கெட், 4 போட்டி) ஏமாற்றி வருகிறார். சென்னைக்கு எதிரான போட்டியில் சொதப்பிய இவர், ஒரு ரன்னில் அஷ்வின் 'சுழலில்' சிக்கினார்.
02-Apr-2025
07-Apr-2025