உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரஞ்சி கோப்பை: தமிழக அணி பரிதாபம்

ரஞ்சி கோப்பை: தமிழக அணி பரிதாபம்

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி 'பாலோ-ஆன்' பெற்றது.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. கோவையில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் விளையாடுகின்றன. சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 500 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி 23/1 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு கேப்டன் நாராயண் ஜெகதீசன் (49), அஜித் ராம் (34), விஜய் சங்கர் (32) ஓரளவு கைகொடுத்தனர். பிரதோஷ் ரஞ்சன் பால் (8), பூபதி குமார் (13) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஷாருக்கான் (50), ஆன்ட்ரி சித்தார்த் அரைசதம் விளாசினார்.தமிழக அணி முதல் இன்னிங்சில் 259 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆன்ட்ரி சித்தார்த் (55) அவுட்டாகாமல் இருந்தார். சத்தீஸ்கர் சார்பில் சுபம் அகர்வால் 5 விக்கெட் சாய்த்தார். 241 ரன் பின்தங்கிய தமிழக அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்கப்பட்டது.இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் (6) ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி ஒரு விக்கெட்டுக்கு 71 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஜெகதீசன் (28), சித்தார்த் (36) அவுட்டாகாமல் இருந்தனர். இன்றைய கடைசி நாளில் தமிழக பேட்டர்கள் எழுச்சி கண்டால் தோல்வியில் இருந்து தப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை