மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
மெல்போர்ன்: வலைப்பயிற்சியில் இந்திய கேப்டன் ரோகித் காயமடைந்தார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் மெல்போர்னில் வரும் டிச. 26ல் துவங்குகிறது. இதற்கான வலை பயிற்சியின் போது 'த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட்' வீசிய பந்து, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் இடது முழங்காலை பதம் பார்த்தது. சிறிது நேரம் பேட்டிங் செய்த இவர், தனது கால்களை நீட்டி அமர்ந்தார். அவரது முழங்காலில் 'ஐஸ்' ஒத்தடம் கொடுத்தார் பிசியோதெரபிஸ்ட். இதே போல பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட ஆகாஷ் தீப் கையிலும் பந்து தாக்கியது. ஏற்கனவே பயிற்சியின் போது ராகுலின் வலது கையில் பந்து பட்டதில் காயம் அடைந்தார்.இது பற்றி ஆகாஷ் தீப் கூறுகையில்,''கிரிக்கெட் பயிற்சியின் போது வீரர்கள் காயம் அடைவது சகஜம். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை,'' என்றார்.பெர்த் டெஸ்டில் பங்கேற்காத ரோகித், அடுத்து நடந்த அடிலெய்டு, பிரிஸ்பேன் டெஸ்டில் 6வது இடத்தில் களமிறங்கி (3, 6, 10 ரன்) சோபிக்கவில்லை.இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''ரோகித் தெளிவான மனநிலையுடன் விளையாட வேண்டும். தாக்குதல் ஆட்டமா அல்லது தற்காப்பு ஆட்டமா என குழப்பம் அடையக்கூடாது. தாக்குதல் பாணியில் விளையாடி ரன் சேர்க்க வேண்டும்,''என்றார்.தவிக்கும் 'குரு' காம்பிர் அஷ்வின் ஓய்வு பெற்றுவிட்டார். ரோகித், கோலி, ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஓய்வை நோக்கி நகர்கின்றனர். இந்திய அணி பெரும் மாற்றத்தை நோக்கி செல்கிறது.இந்தச் சூழலில் பயிற்சியாளர் காம்பிர் இக்கட்டான நிலையில் உள்ளார். இவர் விரும்பும் அணியை தேர்வு செய்யும் உரிமையை பி.சி.சி.ஐ., வழங்க வேண்டும். டெஸ்ட் போட்டிக்கான எதிர்கால கேப்டனாக பும்ரா உள்ளார். 'டி-20' அரங்கில் அணியை வழிநடத்த சூர்யகுமார் உள்ளார். பிரிஸ்பேன் டெஸ்ட் 'டிரா' ஆனதும் மகிழ்ந்த காம்பிருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பெற வேண்டும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (50 ஓவர், 2025) சாதிக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் பயிற்சியாளர் மீது பழி சுமத்தப்படும். இந்த நெருக்கடிகளை கடந்த அணியை கரை சேர்ப்பாரா காம்பிர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
03-Dec-2024
10-Dec-2024