வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஸ்மிருதி மந்தனா மேலும் பிரதிகா சதம் அடித்து வெற்றி பெற்றதற்கு நல் வாழ்த்துக்கள் இறுதி போட்டியில் கோப்பையை வெல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
நவி மும்பை: உலக கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. ஸ்மிருதி மந்தனா, பிரதிகா சதம் விளாச, இந்திய அணி 53 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் நியூசிலாந்தை வீழ்த்தியது.இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறின.நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சோபி டெவின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. மந்தனா, 88 பந்தில் சதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 212 ரன் சேர்த்த போது மந்தனா (109) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய பிரதிகா (122) சதம் கடந்தார். ஜெமிமா, தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.இந்திய அணி 48 ஓவரில் 329/2 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற பின், 49 ஓவர் போட்டியாக நடந்தது. இந்திய அணி 49 ஓவரில் 340/3 ரன் எடுத்தது. ஜெமிமா (76) அவுட்டாகாமல் இருந்தார்.மீண்டும் மழை வர, வெற்றிக்கு 44 ஓவரில், 325 ரன் என, 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலக்கு மாற்றப்பட்டது. நியூசிலாந்து அணி 44 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. புரூக் ஹாலிடே (81), இசபெல்லா (65*) அரைசதம் கடந்தனர்.இதுவரை விளையாடிய 6 போட்டியில், 3ல் வென்ற இந்திய அணி (6 புள்ளி), அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. இரண்டாவது இடம்சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (14 சதம்) 2வது இடம். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மேக் லானிங் (15 சதம்) உள்ளார்.முதலிடம்ஒரு ஆண்டில் அதிக சதம் (தலா 5, 2025) விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் தஸ்னிம் பிரிட்ஸ் உடன் பகிர்ந்து கொண்டார் ஸ்மிருதி மந்தனா.* ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன் (5194 ரன், 113 போட்டி) குவித்த துவக்க வீராங்கனையானார் ஸ்மிருதி மந்தனா. அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (5088 ரன், 137 போட்டி) உள்ளார்.அதிவேக '1000'சோபி டெவின் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இந்தியாவின் பிரதிகா, ஒருநாள் போட்டியில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர், 23 போட்டியில், 2 சதம் உட்பட 1110 ரன் எடுத்துள்ளார். குறைந்த இன்னிங்சில் (23) இந்த இலக்கை அடைந்த வீராங்கனை பட்டியலில் முதலிடத்தை லிண்ட்சே ரீலருடன் (ஆஸி.,) பகிர்ந்து கொண்டார் பிரதிகா.சிக்சர் மழைநான்கு சிக்சர் விளாசிய இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஒரே ஆண்டில் அதிக சிக்சர் அடித்த வீராங்கனையானார். இவர், இந்த ஆண்டு 31 சிக்சர் பறக்கவிட்டார். இதற்கு முன், 2017ல் தென் ஆப்ரிக்காவின் லிசெல் லீ, 28 சிக்சர் அடித்திருந்தார்.சூப்பர் ஜோடிஇந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (109), பிரதிகா (122) ஜோடி சதம் விளாசியது. சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு இன்னிங்சில் துவக்க வீராங்கனைகள் இருவரும் சதம் விளாசியது 3வது முறையாக அரங்கேறியது. இதற்கு முன், இங்கிலாந்தின் லின் தாமஸ், எனிட் பேக்வெல் (எதிர்: சர்வதேச 'லெவன்' அணி, 1973, ஹோவ்), ஆஸ்திரேலியாவின் லிண்ட்சே ரீலர், ரூத் பக்ஸ்டீன் (எதிர்: நெதர்லாந்து, 1988, பெர்த்) ஜோடி இப்படி சாதித்தன.* ஒரு ஆண்டில் அதிக ரன் குவித்த ஜோடி (வீரர்/வீராங்கனை) வரிசையில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா-பிரதிகா (1557 ரன், 2025) 2வது இடம் பிடித்தனர். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின்-கங்குலி ஜோடி (1635 ரன், 1998) உள்ளது.* ஸ்மிருதி மந்தனா-பிரதிகா ஜோடி, அதிக முறை (2) ஒரு இன்னிங்சில் 200 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. ஏற்கனவே மேக் லானிங்-எல்லிஸ் பெர்ரி (ஆஸி.,), தஸ்னிம் பிரிட்ஸ்-லாரா (தெ.ஆப்.,), டாமி பியூமன்ட்-அமி ஜோன்ஸ் (இங்கி.,) ஜோடி இப்படி சாதித்தன.10 சதம்இந்த ஆண்டு இந்தியா சார்பில் 10 சதம் பதிவாகின. ஒருநாள் போட்டி அரங்கில், ஒரு ஆண்டில் அதிக சதம் விளாசிய அணியானது இந்தியா. இதற்கு முன், 2018ல் தென் ஆப்ரிக்க வீராங்கனைகள் 8 சதம் அடித்திருந்தனர்.
ஸ்மிருதி மந்தனா மேலும் பிரதிகா சதம் அடித்து வெற்றி பெற்றதற்கு நல் வாழ்த்துக்கள் இறுதி போட்டியில் கோப்பையை வெல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்