உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பைனலில் தென் ஆப்ரிக்கா: வெளியேறியது ஆஸ்திரேலியா

பைனலில் தென் ஆப்ரிக்கா: வெளியேறியது ஆஸ்திரேலியா

துபாய்: 'டி-20' உலக கோப்பை பைனலுக்கு தென் ஆப்ரிக்க பெண்கள் அணி முன்னேறியது. அரையிறுதியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது.துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா 'பீல்டிங்' தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனே (44), கேப்டன் தஹ்லியா மெக்ராத் (27), எல்லிஸ் பெர்ரி (23) கைகொடுக்க, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. லிட்ச்பீல்டு (16) அவுட்டாகாமல் இருந்தார்.சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு தஸ்மின் பிரிட்ஸ் (15) சுமாரான துவக்கம் கொடுத்தார். அபாரமாக ஆடிய அன்னேக் போஷ் அரைசதம் விளாசினார். கேப்டன் லாரா வோல்வார்ட் (42) நம்பிக்கை தந்தார். மேகன் ஷட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய போஷ் வெற்றியை உறுதி செய்தார்.தென் ஆப்ரிக்க அணி 17.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. கடந்த ஆண்டு பைனலில் ஆஸ்திரேலியாவிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. தவிர, பெண்கள் 'டி-20' உலக கோப்பை அரங்கில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை