வென்றது வெஸ்ட் இண்டீஸ் * பூரன், ஹோப் அரைசதம்
தரவுபா: முதல் 'டி-20' போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட்டில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஸ்டப்ஸ் ஆறுதல்தென் ஆப்ரிக்க அணிக்கு ரியான் (4), ஹென்ரிக்ஸ் (4), கேப்டன் மார்க்ரம் (14), துசென் (5), பெரெய்ரா (8) என வரிசையாக ஏமாற்றினர். பாட்ரிக் 44 ரன் எடுத்தார். ஸ்டப்ஸ், 42 பந்தில் 76 ரன் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 174/7 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மாத்யூ 3, ஷமர் 2 விக்கெட் சாய்த்தனர்.பூரன் விளாசல்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதானஸ், ஷாய் ஹோப் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. 8 ஓவரில் 84 ரன் சேர்த்த போது அதானஸ் (40) அவுட்டானார். ஹோப் 51 ரன் எடுத்தார். சிக்சர் மழை பொழிந்தார் நிகோலஸ் பூரன். கேப்டன் பாவெல் (7) அவுட்டான போதும், பூரன் அரைசதம் விளாச, வெற்றி எளிதானது.வெஸ்ட் இண்டீஸ் அணி 17.5 ஓவரில் 176/3 ரன் எடுத்து, எளிதாக வெற்றி பெற்றது. பூரன் (65 ரன், 26 பந்து, 7x6, 2x4), ராஸ்டன் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.இளம் வீரர்தென் ஆப்ரிக்க அணிக்காக அறிமுகம் ஆன இளம் வீரர் ஆனார் வேகப்பந்து வீச்சாளர் மபகா (18 வயது, 137 நாள்). இதற்கு முன் பென்யோ விக்டர் (18 வயது, 314 நாள்) இருந்தார்.