உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை: பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்

நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை: பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்

காலே: பிரபாத் ஜெயசூர்யா 'சுழலில்' கைகொடுக்க இலங்கை அணி 63 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 305, நியூசிலாந்து 340 ரன் எடுத்தன. இலங்கை அணி 2வது இன்னிங்சில் 309 ரன் எடுத்தது. பின், 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 4ம் நாள் முடிவில் 207/8 ரன் எடுத்திருந்தது. ரச்சின் (91) அவுட்டாகாமல் இருந்தார்.ஐந்தாம் நாள் ஆட்டத்தில் வெற்றி பெற நியூசிலாந்துக்கு 68 ரன், இலங்கைக்கு 2 விக்கெட் தேவைப்பட்டன. பிரபாத் ஜெயசூர்யா 'சுழலில்' ரச்சின் ரவிந்திரா (92), வில்லியம் ஓ'ரூர்க் (0) சிக்கினர். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 211 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. அசாஜ் படேல் (2) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5, ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட் சாய்த்தனர்.இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பிரபாத் ஜெயசூர்யா வென்றார். இரண்டாவது டெஸ்ட், செப். 26ல் காலேயில் துவங்குகிறது.

'நம்பர்-3'

காலே டெஸ்டில் வென்ற இலங்கை அணி (வெற்றி சதவீதம் 50.00), ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2024-25) புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி (42.86%) 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதலிரண்டு இடங்களில் இந்தியா (71.67%), ஆஸ்திரேலியா (62.50%) நீடிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை