உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சுனில் நரைன் 600 விக்கெட்

சுனில் நரைன் 600 விக்கெட்

அபுதாபி: 'டி-20' அரங்கில் 600 விக்கெட் சாய்த்த 3வது வீரர் என்ற சாதனை படைத்தார் சுனில் நரைன்.ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), சர்வதேச லீக் 'டி-20' 4வது சீசன் நடக்கிறது. ஷார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி (233/4), 39 ரன் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை (194/9) வீழ்த்தியது.இப்போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய அபுதாபி அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் 37, ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 600 விக்கெட் சாய்த்த 3வது பவுலரானார். கோல்கட்டா, லாஸ் ஏஞ்சல்ஸ், கயானா, சிட்னி சிக்சர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கான விளையாடிய இவர், 568 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார்.ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (681 விக்கெட், 499 போட்டி), வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோ (631 விக்கெட், 582 போட்டி) இந்த இலக்கை கடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி