உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தமிழக அணி திணறல்: ரஞ்சி கோப்பை காலிறுதியில்

தமிழக அணி திணறல்: ரஞ்சி கோப்பை காலிறுதியில்

நாக்பூர்: தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் விதர்பா அணி ஆதிக்கம் செலுத்துகிறது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடக்கும் காலிறுதியில் தமிழகம், விதர்பா அணிகள் விளையாடுகின்றன. விதர்பா அணி முதல் இன்னிங்சில் 353 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 159/6 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் (48), சோனு யாதவ் (32) ஓரளவு கைகொடுத்தனர். தமிழக அணி முதல் இன்னிங்சில் 225 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. விதர்பா சார்பில் ஆதித்யா தாக்கரே 5 விக்கெட் வீழ்த்தினார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு அதர்வா (19), துருவ் ஷோரே (20), கருண் நாயர் (29) ஆறுதல் தந்தனர். யாஷ் ரத்தோட் அரைசதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 169/5 ரன் எடுத்து, 297 ரன் முன்னிலை பெற்றிருந்தது. யாஷ் (55), ஹர்ஷ் துபே (29) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் கைப்பற்றினார்.இரண்டு நாள் மீதமுள்ள நிலையில், தமிழக பேட்டர்கள் எழுச்சி கண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

சூர்யகுமார் அரைசதம்

கோல்கட்டாவில் நடக்கும் மற்றொரு காலிறுதியில் மும்பை, ஹரியானா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் மும்பை 315, ஹரியானா 301 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் சூர்யகுமார் யாதவ் (70), கேப்டன் ரகானே (88*) கைகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2வது இன்னிங்சில் 278/4 ரன் எடுத்து, 292 ரன் முன்னிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை