உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தமிழக அணி வெற்றி: விஜய் ஹசாரே டிராபியில்

தமிழக அணி வெற்றி: விஜய் ஹசாரே டிராபியில்

விஜயநகரம்: விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 73 ரன் வித்தியாசத்தில் வென்றது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி ('லிஸ்ட் ஏ') 32வது சீசன் நடக்கிறது. விஜயநகரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சத்தீஸ்கர் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.தமிழக அணிக்கு பாபா இந்திரஜித் (75), விஜய் சங்கர் (71) கைகொடுக்க, 50 ஓவரில் 301 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சத்தீஸ்கர் சார்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.சவாலான இலக்கை விரட்டிய சத்தீஸ்கர் அணிக்கு பூபன் லால்வானி (54), அஷுதோஷ் சிங் (71) ஆறுதல் அளித்தனர். சத்தீஸ்கர் அணி 46 ஓவரில் 228 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3, சாய் கிஷோர் 2 விக்கெட் சாய்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ