உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / திலக் வர்மா, பிரதம் சதம்: இந்தியா ஏ முன்னிலை

திலக் வர்மா, பிரதம் சதம்: இந்தியா ஏ முன்னிலை

அனந்தபூர்: திலக் வர்மா, பிரதம் சிங் சதம் கடந்து கைகொடுக்க இந்தியா 'ஏ' அணி முன்னிலை பெற்றது.ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் டிராபி கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்தியா 'ஏ', இந்தியா 'டி' அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 290, இந்தியா 'டி' 183 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி 115/1 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் பிரதம் சிங் (122), திலக் வர்மா (111*) சதம் கடந்து கைகொடுக்க, இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 380 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.பின் 488 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'டி' அணி, ஆட்டநேர முடிவில் 62/1 ரன் எடுத்திருந்தது.அபிமன்யு சதம்மற்றொரு லீக் போட்டியில் இந்தியா 'பி', இந்தியா 'சி' அணிகள் விளையாடுகின்றன. இந்தியா 'சி' அணி முதல் இன்னிங்சில் 525 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 'பி' அணி 124/0 ரன் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் நாராயணன் ஜெகதீசன் (70) நம்பிக்கை தந்தார். சர்பராஸ் கான் (16), ரிங்கு சிங் (6), நிதிஷ் குமார் (2), வாஷிங்டன் சுந்தர் (13), சாய் கிஷோர் (21) சோபிக்கவில்லை. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (143*) சதம் கடந்தார்.ஆட்டநேர முடிவில் இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்சில் 309/7 ரன் எடுத்து, 216 ரன் பின்தங்கி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ