உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஓய்வு பெற்றார் விராத் கோலி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து

ஓய்வு பெற்றார் விராத் கோலி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து

புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராத் கோலி.இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 36. களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் இவர், 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார். வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். இவரது வழியில், தான் நேசித்த டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.பாடம் படித்தேன்: ஓய்வு குறித்து சமூகவலைளத்தில் கோலி வெளியிட்ட உருக்கமான பதிவு:டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் நீல நிற தொப்பியை முதன்முதலில் 2011ல் அணிந்தேன். 14 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இவ்வளவு காலம் எனது பயணம் நீடிக்கும் என கற்பனை கூட செய்தது இல்லை. இது என்னை சோதித்தது, செதுக்கியது, வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக் கொடுத்தது. வெள்ளை உடையில் விளையாடுவது தனிப்பட்ட முறையில் ஆழமான உணர்வை தரும். நீண்ட நாள் ஆட்டம், அதில் யாரும் பார்க்காத சில தருணங்கள் அற்புதமானவை. இவை என்றும் மனதில் நிலைத்திருக்கும். புன்னகை அனுபவம்: டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவது எளிதானதல்ல. ஆனால் இது சரியான நேரம் என உணர்கிறேன். இப்போட்டிக்காக அனைத்தையும் கொடுத்துள்ளேன். அதுவும், எதிர்பார்த்ததைவிட எனக்கு அதிகம் திரும்ப கொடுத்துள்ளது. டெஸ்ட் அரங்கில் என்னுடன் களத்தை பகிர்ந்து கொண்டவர்கள் உட்பட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி தெரிவித்து, விடைபெறுகிறேன். எனது டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் ஒரு புன்னகையுடன் திரும்பி பார்ப்பேன்.இவ்வாறு கோலி குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டு சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி. இனி இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் இவரது ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்கலாம். 2027, உலக கோப்பை தொடர் வரை நீடிக்கலாம்.'269' ரகசியம் என்ன இந்திய டெஸ்ட் அணியில் 269வது வீரராக, 2011ல் கோலி (எதிர், வெஸ்ட் இண்டீஸ்) அறிமுகமானார். இந்த எண் கொண்ட தொப்பி வழங்கப்பட்டது. இதை உணர்த்தும் விதமாக, ஓய்வு குறித்த தனது பதிவின் முடிவில், 'விடைபெறுகிறது 269' என கோலி குறிப்பிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் 'டிரணெ்ட்' ஆனது. 'பயோ-டேட்டா'பெயர்: விராத் கோலிபிறந்த நாள்: 05-11-1988பிறந்த இடம்: டில்லி'ரோல்': 'டாப்-ஆர்டர் பேட்டர்'பேட்டிங் ஸ்டைல்: வலது கைமொத்த டெஸ்ட்: 123ரன்: 9230சதம்: 30அரைசதம்: 31அதிகபட்ச ரன்: 254* (எதிர்: தெ.ஆப்., 2019, புனே)சிக்சர்: 30பவுண்டரி: 1027சராசரி: 46.85'ஸ்டிரைக் ரேட்': 55.57


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Krishnamurthy Venkatesan
மே 14, 2025 12:12

இவரை போன்று உடல் தகுதி உள்ள விளையாட்டு வீரர்களை விறல் விட்டு எண்ணி விடலாம். காலத்தில் ஆக்ரோஷம், செயல்பாட்டில் நிதானம், குறி வெற்றியை நோக்கி மட்டுமே. நான் இனிமேல் கிரிக்கெட்டை அவ்வளவு ஆர்வமுடன் பார்ப்பேனா என்பது சந்தேகமே?


என்றும் இந்தியன்
மே 13, 2025 16:11

கடந்த ஆண்டு சர்வதேச டி-20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராத் கோலி. இனி இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் இவரது ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்கலாம். 2027, உலக கோப்பை தொடர் வரை நீடிக்கலாம். இந்த நாடகம் இன்னும் எத்தனை நாளம்மா???மிகசிறந்த பிளேயர் அதில் சந்தேகமேயில்லை???இந்த டப்பாக்கள் எதற்கு??? அதில் ஒய்வு இதில் ஒய்வு ஆனால் இதில் விளையாடுவார் என்று. இவர்களுக்கும் நடிகர்களுக்கும் வித்தியாசமில்லையா???


Minimole P C
மே 13, 2025 07:47

One of the great crickter of Indian cricket. His contribution is one of the best. It is sad that we cannot see him at Indian matches but in the interests of Indian cricket he made this decision. The two great players Sharma and Kohli retiring at a time will a space which take some time to get filled despite India has a lot of potential players.


Vasan
மே 13, 2025 03:48

Kohli should have continued at least till reaching a personal milestone of 10000 runs.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை