உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / எழுச்சி பெறுமா சென்னை அணி: லக்னோ அணியுடன் மோதல்

எழுச்சி பெறுமா சென்னை அணி: லக்னோ அணியுடன் மோதல்

லக்னோ: சென்னை அணி இன்று கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. வேதனை தீர்க்க, 'தல' தோனி காத்திருக்கிறார்.லக்னோவில் உள்ள வாஜ்பாய் எகானா மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மோதுகின்றன.தேறுமா 'டாப்-ஆர்டர்': பிரிமியர் அரங்கில் முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்ற சோகத்தில் சென்னை அணி உள்ளது. 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்க வைக்க, வரும் போட்டிகளில் வெற்றி அவசியம். 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் அதிரடியாக ரன் சேர்க்காதது பலவீனம். 'பவர்பிளே' ஓவரில் (முதல் 6 ஓவர்) 60 ரன் எடுக்கவே சிரமப்படுகிறது. முதல் பந்தில் இருந்தே விளாச ரச்சின், கான்வே தவறுகின்றனர். காயம் காரணமாக ருதுராஜ் நீக்கப்பட்ட நிலையில், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா தடுமாறுகின்றனர். 'பவர் ஷாட்' அடிக்கும் திறன் பெற்ற ஷிவம் துபே, தமிழக வீரர் விஜய் சங்கர் நிலைத்து நின்று விளையாடினால் நல்லது. அனுபவ ரவிந்திர ஜடேஜா ஏனோதானோ என பேட் செய்கிறார். அணியை கரை சேர்க்கும் ஆற்றல் படைத்த கேப்டன் தோனி, எந்த இடத்தில் களமிறங்குவார் என்பதை கணிக்க முடியவில்லை. 9வது இடத்தில் வருவதை தவிர்க்கலாம். சேப்பாக்கம் போல அல்லாமல், லக்னோ ஆடுகளம் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும். இதை சென்னை பேட்டர்கள் பயன்படுத்தினால், வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.'வேகத்தில்' மிரட்ட கலீல் அகமது, பதிரானா உள்ளனர். 'சுழலில்' தமிழகத்தின் அஷ்வின், ஜடேஜா, நுார் அகமது அசத்தலாம்.மிரட்டும் பூரன்: லக்னோ அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. மிட்சல் மார்ஷ் (மகளுக்கு உடல்நிலை பாதிப்பு) இடம் பெறுவது சந்தேகம். ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட 'காஸ்ட்லி' கேப்டன் ரிஷாப் பன்ட், துவக்கத்தில் வரலாம். 6 போட்டியில் 40 ரன் (சராசரி 8.00) மட்டுமே எடுத்துள்ளார். இன்று விளாச முயற்சிக்கலாம். மார்க்ரம் நல்ல 'பார்மில்' உள்ளார். நிகோலஸ் பூரன் (6 போட்டி, 349 ரன், சராசரி 69.80, ஸ்டிரைக் ரேட் 215.43), மில்லர் வாணவேடிக்கை காட்டுவது பலம். பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், அவேஷ் கான், ஆகாஷ் தீப், பிஷ்னோய் கைகொடுக்கலாம். 'மிடில் ஓவரில்' திக்வேஷ் ரதி 'சுழல்' ஜாலம் நிகழ்த்தலாம். யார் ஆதிக்கம்பிரிமியர் அரங்கில், இரு அணிகளும் 5 போட்டியில் மோதின. லக்னோ 3, சென்னை 1ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. * லக்னோ வாஜ்பாய் எகானா மைதானத்தில் இரு போட்டியில் மோதின. லக்னோ 1ல் வென்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. மழை வருமாவானம் தெளிவாக இருக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை.ஆடுகளம் எப்படிலக்னோ, வாஜ்பாய் எகானா மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பெரிய ராசு
ஏப் 14, 2025 10:51

போனவனுன பார்ப்பது வேஸ்டு


Vasan
ஏப் 14, 2025 09:47

CSK is in poor form now. To get CSK back to their old glory, this needs to be done. 1 Retired players like Srikkanth, Sadagopan Ramesh, Laxmipathy Balaji, Abinav Mukund, Yo Magesh should be drafted into CSK squad playing XI 2 Dhoni should stop critics who talk about his retirement and should continue to lead the side till 2030. 3 Ashwin should take over Captaincy from Dhoni and lead the side for 5 years from 2031 to 2035 4 Jadeja should take over Captaincy from Ashwin and lead the side for the next 5 years from 2036 to 2040. 5 By doing so, victory for CSK is assured for the next 15 years. This year it is not possible, sorry.


தமிழன்
ஏப் 14, 2025 01:37

சென்னை அணி எழுச்சி பெறும் எப்போது தெரியுமா?? சென்னை அணி பேட் செய்யும்போது எதிரணி ரப்பர் பந்தை மெதுவாக வீசினால், எதிரணி பேட் செய்யும் போது விக்கெட் குச்சியை விட்டு 2 அடி சைடில் நகர்ந்து நின்றால் சென்னை கண்டிப்பாக வெற்றி பெறும்


முக்கிய வீடியோ