உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியாவுக்கு ரூ. 19.49 கோடி பரிசு

இந்தியாவுக்கு ரூ. 19.49 கோடி பரிசு

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வென்ற இந்தியா அணிக்கு கோப்பையுடன், ரூ. 19.49 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணி ரூ. 9.74 கோடி பரிசு பெற்றது.ஹென்றி '10'அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மாட் ஹென்றி முதலிடம் பிடித்தார். இவர், 4 போட்டியில், 10 விக்கெட் சாய்த்தார். அடுத்த மூன்று இடங்களை இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, நியூசிலாந்தின் சான்ட்னர் (தலா 9 விக்கெட்) கைப்பற்றினர்.ரச்சின் '263'அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா முதலிடத்தை தட்டிச் சென்றார். இவர், 4 போட்டியில், 2 சதம் உட்பட 263 ரன் எடுத்தார். இந்தியாவின் ஸ்ரேயாஸ் (243 ரன், 5 போட்டி) 2வது இடத்தை கைப்பற்றினார். அடுத்த மூன்று இடங்களை இங்கிலாந்தன் பென் டக்கெட் (227 ரன், 3 போட்டி), ஜோ ரூட் (225 ரன், 3 போட்டி), இந்தியாவின் விராத் கோலி (218 ரன், 5 போட்டி) கைப்பற்றினர்.அடுத்து இந்தியாவில்...பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 10வது சீசன், வரும் 2029ல் இந்தியாவில் நடக்க உள்ளது.'தொடர் நாயகன்' ரச்சின்நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா, தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். பேட்டிங்கில் 263 ரன் குவித்த இவர், பவுலிங்கில் 3 விக்கெட் சாய்த்தார். சாம்பியன்ஸ் டிராபியில் இவ்விருது வென்ற முதல் நியூசிலாந்து வீரர், 7வது சர்வதேச வீரரானார். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (1998), வெஸ்ட் இண்டீசின் சர்வான் (2004), கெய்ல் (2006), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (2009), இந்தியாவின் தவான் (2013), பாகிஸ்தானின் ஹசன் அலி (2017) இவ்விருது வென்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
மார் 11, 2025 20:43

இந்தியன் மற்றும் டுபுக்கு ஆஸ்திரேலியா புகழ் ?? மெய்எதிர்பாளர்களுக்கு பாக்கிஸ்தான் மண்ணிலே நடக்கும் ஆட்டத்தையும் லாவகமாக இந்திய அங்கு செல்லாமலே டுபாயில் ஆடி அசத்தி கோப்பையை கைப்பற்றியது குறித்து நீங்க மண்டை காஞ்சீங்க என்பது எங்களுக்கு புரிஞ்சுவிட்டது.. ஹஹ்ஹ ஹா


சமீபத்திய செய்தி