உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வில்லியம்சன் சதம்: நியூசிலாந்து வெற்றி

வில்லியம்சன் சதம்: நியூசிலாந்து வெற்றி

லாகூர்: முத்தரப்பு லீக் போட்டியில் வில்லியம்சன் சதம் விளாச, நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. லாகூரில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் பவுமா (20) நிலைக்கவில்லை. பிரீட்ஸ்கே (150) அசத்தினார். வியான் முல்டர் (64), ஜேசன் ஸ்மித் (41) கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கான்வே (97) நம்பிக்கை தந்தார். கேன் வில்லியம்சன், 113 பந்தில் 133* ரன் (2 சிக்சர், 13 பவுண்டரி) குவித்து வெற்றிக்கு உதவினார். நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 308 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை வில்லியம்சன் வென்றார்.முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து பைனலுக்கு முன்னேறியது.

அசத்தல் அறிமுகம்

அறிமுக ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த வீரரானார் தென் ஆப்ரிக்காவின் பிரீட்ஸ்கே (150). இதற்கு முன் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெ.இ.,), 148 ரன் (எதிர்: ஆஸி., 1978, ஆன்டிகுவா) எடுத்திருந்தார்.கோலியை முந்தினார்ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 7000 ரன்னை எட்டிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் கோலியை (161 இன்னிங்ஸ்) முந்தி 2வது இடம் பிடித்தார் வில்லியம்சன். இவர்159 இன்னிங்சில் 7001 ரன் குவித்துள்ளார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (150 இன்னிங்ஸ்) உள்ளார்.2060 நாட்களுக்கு பின்நியூசிலாந்தின் வில்லியம்சன், ஒருநாள் போட்டி அரங்கில் 2060 நாட்களுக்கு பின் நேற்று சதம் அடித்தார். கடைசியாக 2019, ஜூன் 22ல் மான்செஸ்டரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் சதம் (148) அடித்திருந்தார். 47 சதம்சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 14வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சுடன் பகிர்ந்து கொண்டார் வில்லியம்சன். இருவரும் தலா 47 சதம் அடித்துள்ளனர். இதில் வில்லியம்சன் டெஸ்டில் 33 (105 போட்டி), ஒருநாளில் 14 (167 போட்டி) என, 47 சர்வதேச சதம் அடித்துள்ளார். சர்வதேச 'டி-20'ல் (93 போட்டி) சதம் அடித்ததில்லை.இப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (100 சதம்), கோலி (81) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ