உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரோகித், கோலி இல்லாமல்: என்ன சொல்கிறார் கவாஸ்கர்

ரோகித், கோலி இல்லாமல்: என்ன சொல்கிறார் கவாஸ்கர்

புதுடில்லி: ''ரோகித், கோலி இல்லாமல் இந்திய அணி வெற்றி பெறும். பேட்டிங் வலிமையாக உள்ளது,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் 2024ல் 'டி-20' உலக கோப்பை வென்றது. அடுத்து சொந்தமண்ணில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் டிராபி என இரண்டு டெஸ்ட் தொடரில் மோசமாக தோற்றது இந்தியா (0-3, 1-3). இதனால் ரோகித், கோலி ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை எழுந்தன. தவிர பும்ராவும் காயமடைய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெல்வது கடினம் என விமர்சிக்கப்பட்டன.ஆனால் கோலி, ரோகித் எழுச்சி காரணமாக, 9 மாத இடைவெளியில் இந்தியா இரண்டாவது ஐ.சி.சி., கோப்பை ('டி-20' உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்றது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் 75, கூறியது:சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பை வென்றது ஸ்பெஷலானது. ஆஸ்திரேலிய மண்ணில் அடைந்த தோல்விக்குப் பின் மீண்டு வந்து சாதித்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பும்ராவை மட்டும் பெரிதும் நம்பி இருந்தது. சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில், இவர் இல்லாமல் சிறிய இலக்கை ஆஸ்திரேலியா எளிதாக சேஸ் செய்து, தொடரை கைப்பற்றியது.இதற்கு முன் ரோகித், கோலி இல்லாமல் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இம்முறை பும்ரா இல்லாமல் இந்தியா சாதித்துள்ளது. அணியில் யாரும் முக்கியமானவர்கள் அல்ல என்பதை இந்த வெற்றிகள் வெளிப்படுத்துகின்றன. அதேநேரம், இந்த மூவரும் அணியில் இருந்தால், இந்தியா வீழ்த்த முடியாத அணியாக திகழும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை