உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மல்யுத்தம்: பிரியா தங்கம்

மல்யுத்தம்: பிரியா தங்கம்

உங் டாவ்: வியட்நாமில் 17, 23 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 23 வயது பிரிவில் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் பிரியா மாலிக், முதல் இரு போட்டியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது போட்டியில் பிரியா 3-0 என கிர்கிஸ்தானின் கயர்குல்லை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். 68 கிலோ பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் சிர்ஷ்டி, பைனலில் வியட்நாமின் யுகி லியுவை சந்தித்தார். இதில் 10-0 என வென்ற சிர்ஷ்டி, தங்கம் வசப்படுத்தினார்.மற்றொரு பைனலில் இந்தியாவின் ரீனா (55 கிலோ), கிர்கிஸ்தானின் அருகியை 13-4 என்ற கணக்கில் வென்று, தங்கம் வசப்படுத்தினார். 50 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பிரியான்ஷி, 4-2 என மங்கோலியாவின் முன்கெரெலை சாய்த்து, தங்கம் கைப்பற்றினார். இதுவரை இந்தியா, 4 தங்கம், 1 வெள்ளி என 5 பதக்கம் வென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !