உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இளம் இந்தியா சாம்பியன்: பெண்கள் ஆசிய கோப்பையில்

இளம் இந்தியா சாம்பியன்: பெண்கள் ஆசிய கோப்பையில்

கோலாலம்பூர்: ஆசிய கோப்பை (19 வயது) 'டி-20' பைனலில் அசத்திய இந்திய பெண்கள் அணி, 41 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஆசிய கோப்பை ('டி-20') கிரிக்கெட் முதல் சீசன் நடந்தது. பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.இந்திய அணிக்கு கமலினி (5), சனிகா (0), கேப்டன் நிக்கி பிரசாத் (12), ஈஸ்வரி (5) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய துவக்க வீராங்கனை திரிஷா, 47 பந்தில் 52 ரன் (2 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். மிதிலா (17), ஆயுஷி (10) ஆறுதல் தந்தனர். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்தது. ஜோஷிதா (2), ஷப்னம் (4) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் பர்ஜானா 4 விக்கெட் கைப்பற்றினார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு பஹோமிதா (18), ஜுவைரியா (22) ஆறுதல் தந்தனர். கேப்டன் சுமையா அக்தர் (4), சாடியா அக்தர் (5) உள்ளிட்ட மற்ற வீராங்கனைகள் ஏமாற்றினர். வங்கதேச அணி 18.3 ஓவரில் 76 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஆயுஷி சுக்லா 3, பாருனிகா சிசோடியா, சோனம் யாதவ் தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் திரிஷா வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ