வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வைஷ்ணவிக்கு வாழ்த்துக்கள்
கோலாலம்பூர்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், வைஷ்ணவியின் 'ஹாட்ரிக்' கைகொடுக்க இளம் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.மலேசிய அணி 14.3 ஓவரில் 31 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நுார் அலியா, நசதுல் ஹிதாயா தலா 5 ரன் எடுத்தனர். இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 5, ஆயுஷி சுக்லா 3 விக்கெட் சாய்த்தனர்.சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு திரிஷா (27* ரன், 5 பவுண்டரி), கமலினி (4*) கைகொடுக்க, 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்தியா, 4 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. ஆட்ட நாயகி விருதை வைஷ்ணவி தட்டிச் சென்றார்.
இந்தியாவின் வைஷ்ணவி சர்மா வீசிய 14வது ஓவரின் 2வது பந்தில் நுார் ஐன் பிந்தி (3) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய வைஷ்ணவி, அடுத்த இரு பந்தில் நுார் இஸ்மா டானியா (0), சிடி நஸ்வாவை (0) வெளியேற்றி 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்தார். 'சுழலில்' அசத்திய இவர், 4 ஓவரில், 5 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இதில் ஒரு 'மெய்டன் ஓவர்' அடங்கும். இது, பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயது) அரங்கில் பதிவான சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன் 2023ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் எல்லி ஆண்டர்சன் 5/12 விக்கெட் சாய்த்திருந்தார்.
வைஷ்ணவிக்கு வாழ்த்துக்கள்