உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ஆஸ்திரிய அணி கலக்கல்: யூரோ கோப்பை கால்பந்தில்

ஆஸ்திரிய அணி கலக்கல்: யூரோ கோப்பை கால்பந்தில்

பெர்லின்: 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஆஸ்திரிய அணி 3-1 என போலந்தை வீழ்த்தியது.ஜெர்மனியின் பெர்லினில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'டி' பிரிவு லீக் போட்டியில் போலந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆஸ்திரிய அணிக்கு 9வது நிமிடத்தில் ஜெர்னாட் டிரானர் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 30வது நிமிடத்தில் போலந்து வீரர் பியாடெக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் பாம்கார்ட்னர் (66வது நிமிடம்), மார்கோ அர்னாடோவிக் (78வது, 'பெனால்டி') தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் ஆஸ்திரியா 3-1 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ