உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / அரையிறுதியில் கனடா * வெனிசுலா அணியை சாய்த்தது

அரையிறுதியில் கனடா * வெனிசுலா அணியை சாய்த்தது

டெக்சாஸ்: கோபா கால்பந்து காலிறுதியில் 'சடன் டெத்' முறையில் வெனிசுலாவை வீழ்த்தியது கனடா. அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. டெக்சாசில் நேற்று நடந்த காலிறுதியில் வெனிசுலா, கனடா அணிகள் மோதின. 13வது நிமிடத்தில் கனடா வீரர் ஷபல்பெர்க், கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் வெனிசுலா அணியின் அரம்புரு பந்தை சக வீரர் ராண்டனுக்கு கொடுத்தார். இதை வாங்கிய ராண்டன், துல்லியமாக அடித்து கோலாக மாற்றினார். முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. 'கோபா' விதிப்படி, பைனலுக்கு மட்டும் தான் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதனால், காலிறுதி வெற்றியாளரை முடிவு செய்ய, நேரடியாக 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. வெனிசுலா ஏமாற்றம்இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. * முதல் வாய்ப்பில் ராண்டன் (வெனிசுலா), டேவிட் (கனடா) கோல் அடித்தனர் (1-1).* இரண்டாவது வாய்ப்பை இரு அணி வீரர்களும் வீணடித்தனர். * அடுத்து ரின்கான் (வெனிசுலா), பாம்பிடோ (கனடா) கோல் அடித்தனர் (2-2). * 4வது வாய்ப்பில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. * 5வது வாய்ப்பில் காடிஸ் (வெனிசுலா), டேவிஸ் (கனடா) கோல் அடிக்க ஸ்கோர் 3-3 என ஆனது. இதையடுத்து போட்டி 'சடன் டெத்' முறைக்கு சென்றது. வெனிசுலாவின் ஏஞ்சல் வீணடித்தார். மறுபக்கம் கோனே கோல் அடிக்க, கனடா அணி 4-3 என 'திரில்' வெற்றி பெற்றது. அரையிறுதியில் கனடா-அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ