உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / அமெரிக்காவை வென்றது உருகுவே * கோபா கால்பந்தில்...

அமெரிக்காவை வென்றது உருகுவே * கோபா கால்பந்தில்...

கன்சாஸ் சிட்டி: கோபா கால்பந்து காலிறுதிக்கு முன்னேறியது உருகுவே. நேற்று அமெரிக்காவை 1-0 என வென்றது.அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் உருகுவே, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் வென்றால் காலிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் சொந்தமண்ணில் அமெரிக்கா போராடியது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இரண்டாவது பாதியில், 66வது நிமிடத்தில் உருகுவே வீரர் ஒலிவெரா, ஒரு கோல் அடித்தார். முடிவில் உருகுவே அணி 1-0 என வெற்றீ பெற்றது.பனாமா அபாரம்நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பனாமா, பொலிவியா மோதின. பனாமா அணிக்கு பஜார்டோ (22 வது நிமிடம்), கெரேரோ (79வது), யானிஸ் (90+1வது) தலா ஒரு கோல் அடித்தனர். பொலிவியா சார்பில் மிராண்டா (69வது) மட்டும் கோல் அடித்தார். முடிவில் பனாமா அணி 3-1 என வெற்றி பெற்றது.'சி' பிரிவில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற உருகுவே (9 புள்ளி), இரண்டில் வென்ற பனாமா (6) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. அமெரிக்கா (3), பொலிவியா (0) அணிகள் வெளியேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை