உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / பெருமையா பெரு... பொறுமையா சிலி * கோபா அமெரிக்க கால்பந்தில்...

பெருமையா பெரு... பொறுமையா சிலி * கோபா அமெரிக்க கால்பந்தில்...

டெக்சாஸ்: பெரு, சிலி அணிகள் மோதிய கோபா அமெரிக்க கால்பந்து போட்டி 'டிரா' ஆனது.அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. இதன் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பெரு ('நம்பர்-31), சிலி ('நம்பர் 40') அணிகள் பலப்பரீட்சை நடத்தின.போட்டியின் 16 வது நிமிடத்தில் சிலி அணிக்கு எளிதாக கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. விக்டர் டாவில்லா பந்தை கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். அங்கிருந்த அலெக்சிஸ் சான்செஸ், பந்தை கோலாக மாற்ற முயன்றார். துரதிருஷ்வசமாக பந்து கோல் போஸ்ட் மேலாகச் செல்ல, வாய்ப்பு வீணானது.தொடர்ந்து 26, 29வது நிமிடத்தில் கோல் அடிக்க சிலி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. பெரு அணியின் தற்காப்பு ஆட்டம் பெருமையாக இருந்தது. சிலி பொறுமையாக ஆடியதால், கோல் வாய்ப்புகள் வீணாகின. இரண்டாவது பாதியில் பெரு வீரர் மிகுயல் தலையால் முட்டிய பந்தை, தடுத்து அசத்தினார் சிலி கோல் கீப்பர் கிளாடியோ பிராவோ. தொடர்ந்து இரு அணிகள் கோல் அடிக்க முரட்டு ஆட்டத்தில் இறங்கின. 37 முறை 'பவுல்' செய்தனர். 4 பேருக்கு 'எல்லோ கார்டு' கிடைத்தது. முடிவில் கோல் எதுவுமின்றி (0-0) போட்டி 'டிரா' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை