மேலும் செய்திகள்
போர்ச்சுகல் அணியிடம் வீழ்ந்தது குரோஷியா
03-Jul-2026
மெக்சிகோ சிட்டி: உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் இங்கிலாந்து அணி 3-2 என, 'திரில்' வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. மெக்சிகோ அணி வெளியேறியது.மெக்சிகோவில் உள்ள எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் இங்கிலாந்து, மெக்சிகோ அணிகள் மோதின. இப்போட்டியை காண 80,824 பேர் வந்தனர்.பெல்லிங்ஹாம் அசத்தல்: ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் புகாயோ சாகா துாக்கி அடித்த பந்தை இங்கிலாந்தின் பெல்லிங்ஹாம் தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய பெல்லிங்ஹாம், 39வது நிமிடத்தில் கேப்டன் ஹாரி கேன் 'பாஸ்' செய்த பந்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் குயினோனெஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.'ரெட் கார்டு': இரண்டாவது பாதியின் 52வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜாரெல் குவான்சா, மெக்சிகோ வீரர் ஜீசஸ் கல்லார்டோவை 'பவுல்' செய்தார். இதனால் இரு அணி வீரர்களுக்கு இடையே வார்த்தை மோதல் உண்டானது. பின், 'வார்' தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்த நடுவர், குவான்சாவுக்கு (54வது நிமிடம்) 'ரெட் கார்டு' காண்பித்து வெளியேற்றினார். இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் விளையாடியது.இரண்டு 'பெனால்டி': பின், 58வது நிமிடத்தில் 'கோல் ஏரியா' பகுதிக்குள் மெக்சிகோவின் ரவுல் ரேஞ்சல், கோர்டானை கீழே தள்ளிட, இங்கிலாந்துக்கு 'பெனால்டி' வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் (60வது நிமிடம்) ஹாரி கேன் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ஹாரி கேன், மெக்சிகோவின் பிரையன் குட்டிரெசை 'பவுல்' செய்தார். இதனை 'வார்' தொழில்நுட்பத்தில் உறுதி செய்த நடுவர், மெக்சிகோ அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு வழங்கினார். இதில் (69வது நிமிடம்) ஜிமனெஸ் ஒரு கோல் அடித்தார்.தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3-2 என, 'திரில்' வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் (ஜூலை 11, மயாமி), நார்வே அணியை சந்திக்கிறது.முதல் அணிஎஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடந்த உலக கோப்பை போட்டிகளில், மெக்சிகோவை வீழ்த்திய முதல் அணியானது இங்கிலாந்து. இதற்கு முன், இங்கு விளையாடிய 10 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்தது மெக்சிகோ.முதல் வீரர்உலக கோப்பை வரலாற்றில், 1966க்கு பின், ஒரு போட்டியில் 'பெனால்டி' வாய்ப்பில் கோல் அடித்து, அதே போட்டியில் எதிரணிக்கு 'பெனால்டி' வாய்ப்பை வழங்கிய முதல் வீரரானார் இங்கிலாந்தின் ஹாரி கேன்.* உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில் அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கேரி லினேகருடன் பகிர்ந்து கொண்டார் ஹாரி கேன். இருவரும் தலா 6 முறை கோல் அடித்திருந்தனர்.மூன்றாவது இடம்உலக கோப்பை அரங்கில் அதிக முறை காலிறுதிக்கு முன்னேறிய அணிகளில் 3வது இடம் பிடித்தது இங்கிலாந்து (11). முதலிரண்டு இடங்களில் பிரேசில் (15), ஜெர்மனி (14) உள்ளன.
03-Jul-2026