மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
ரோட்டர்டாம்: நட்பு கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை சாய்த்தது.ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14-ஜூலை 14ல் ஜெர்மனியில் நடக்க உள்ளது. மொத்தம் 24 அணிகள் மோத உள்ளன. இதற்கு தயாராகும் வகையில் தற்போது நட்பு போட்டி நடக்கின்றன. நேற்று நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடந்த போட்டியில் நெதர்லாந்து, ஐஸ்லாந்து அணிகள் மோதின.போட்டியின் துவக்கத்தில் இருந்தே நெதர்லாந்து அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். 23 வது நிமிடத்தில் ஜாவி சைமன்ஸ் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் டிர்கில் வான் (49வது நிமிடம்) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 79 வது நிமிடம் மாலென் ஒரு கோல் அடித்து உதவினார்.போட்டியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+3 வது நிமிடம்) வெக்ஹார்ஸ்ட் ஒரு கோல் அடிக்க, நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.வார்சாவில் (போலந்து) நடந்த போட்டியில் போலந்து அணி 2-1 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் மங்கோலியா அணி 2-1 என கம்போடியாவை வென்றது.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025