உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / செர்பியா-சுலோவேனியா டிரா * யூரோ கோப்பை கால்பந்தில்...

செர்பியா-சுலோவேனியா டிரா * யூரோ கோப்பை கால்பந்தில்...

மன்சென்: செர்பியா, சுலோவேனியா மோதிய யூரோ கோப்பை கால்பந்து லீக் போட்டி, கடைசி நேரத்தில் 'டிரா' ஆனது. ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடக்கிறது. நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் 'பிபா' தரவரிசையில் 32 வது இடத்திலுள்ள செர்பியா, 57 வது இடத்திலுள்ள சுலோவேனிய அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில், போட்டியின் 69 வது நிமிடத்தில் சுலோவேனியாவின் டிமி மேக்ஸ் எல்ஸ்னிக் பந்தை சக வீரர் ஜான் கார்னிக்னிக்கிற்கு 'பாஸ்' செய்தார். இதைப் பெற்ற ஜான், வலது காலால் உதைத்து கோல் அடித்து அசத்தினார். இரண்டாவது பாதியில் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில், போட்டி முடிய 2 நிமிடம் இருந்த போது, செர்பிய வீரர் இவான் லிக், பந்தை சுலோவேனிய கோல் ஏரியாவுக்குள் அடித்தார். இதை, அங்கிருந்த லுகா ஜோவிச், தலையால் முட்டி கோலாக மாற்றினார். முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.'நாக் அவுட்' சுற்றில் சுவிட்சர்லாந்து'ஏ' பிரிவில் நேற்று சுவிட்சர்லாந்து, ஸ்காட்லாந்து மோதின. ஸ்காட்லாந்து அணிக்காக ஸ்காட் மெக்டோமினாய் (13 வது), சுவிட்சர்லாந்து அணி சார்பில் ஷாக்ரி (26 வது) தலா ஒரு கோல் அடித்தனர். இப்போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. 2 போட்டியில் 1 வெற்றி, 1 'டிரா' செய்த சுவிட்சர்லாந்து, 4 புள்ளியுடன் 'நாக் அவுட்' சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை