உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / அர்ஜென்டினா, பிரேசில் அபாரம் * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...

அர்ஜென்டினா, பிரேசில் அபாரம் * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...

பியுனஸ் ஏர்ஸ்: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் 17 வது சுற்று போட்டி நடந்தன. அர்ஜென்டினா அணி தனது சொந்தமண்ணில், வெனிசுலாவை சந்தித்தது. பியுனஸ் ஏர்சில் நடந்த இப்போட்டியில் 39 வது நிமிடம் ஆல்வரஸ் கொடுத்த பந்தை பெற்ற மெஸ்ஸி, கோலாக மாற்றினார். அடுத்து மார்டினஸ் (76) ஒரு கோல் அடித்தார்.80வது நிமிடம் அல்மடாவிடம் இருந்து பந்தை வாங்கிய மெஸ்ஸி, இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பிரேசில் அபாரம்பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த மற்றொரு போட்டியில் பிரேசில் அணி 3-0 என சிலியை வீழ்த்தியது. பிரேசில் சார்பில் எஸ்டெவாவோ (38), பாக்குயட்டா (72), புருனோ (76) தலா ஒரு கோல் அடித்தனர். மற்ற போட்டிகளில் உருகுவே 3-0 என பெருவை வென்றது. கொலம்பியா 3-0 என பொலிவியாவை சாய்த்தது. இதுவரை நடந்த போட்டி முடிவில் அர்ஜென்டினா (38 புள்ளி), பிரேசில் (28), உருகுவே (27), ஈகுவடார் (26), கொலம்பியா (25), பாராகுவே (25) என 'டாப்-6' இடம் பெற்ற அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.சொந்தமண்ணில்...வரும் உலக கோப்பை தொடருடன் (2026) மெஸ்ஸி, ஓய்வு பெறலாம். இந்நிலையில், சொந்தமண்ணில் அர்ஜென்டினா அணிக்காக கடைசியாக களமிறங்கிய இவரைக் காண, மைதானம் நிரம்பி வழிந்தது. மெஸ்சி கூறுகையில்,'' அர்ஜென்டினா அணிக்காக உள்ளூர் ரசிகர்கள் முன்பு விளையாடுவது எப்போதும் ஸ்பெஷலானது. இம்மைதானத்தில் வெற்றியுடன் விடைபெற வேண்டும் என நான் கண்ட கனவு நனவானது,'' என்றார். 36 கோல்தென் அமெரிக்க அணிக்கான உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில், இம்முறை மெஸ்சி 8 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக இவர் இதுவரை 36 கோல் அடித்து 'நம்பர்-1' ஆக உள்ளார். உருகுவேயின் ஓய்வு பெற்ற சாரஸ் (29), பொலிவியாவின் மார்செலோ (22) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ