உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: இந்தியா வெற்றி

கால்பந்து: இந்தியா வெற்றி

ஜகார்த்தா: நட்பு கால்பந்து போட்டியில் இந்திய ஜூனியர் அணி, 2-1 என இந்தோனேஷியாவை வென்றது.இந்தோனேஷியா சென்ற இந்திய ஜூனியர் கால்பந்து (23 வயதுக்கு உட்பட்ட) இரண்டு போட்டி கொண்ட நட்பு தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜகார்த்தாவில் நடந்தது. போட்டி துவங்கிய 5வது நிமிடத்தில் இந்தியாவின் சுஹைல் அகமது பட், ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், 26 வது நிமிடம் தனது இரண்டாவது கோல் அடித்தார். இந்தோனேஷிய தரப்பில் 41வது நிமிடத்தில் டோனி ட்ரி, ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா (2-1) முன்னிலை பெற்றது.முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை