உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / மேற்கு வங்க அணி சாம்பியன் * சந்தோஷ் டிராபி கால்பந்தில்

மேற்கு வங்க அணி சாம்பியன் * சந்தோஷ் டிராபி கால்பந்தில்

ஐதராபாத்: சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரில் மேற்கு வங்க அணி சாம்பியன் ஆனது. பைனலில் 1-0 என கேரளாவை வீழ்த்தியது.இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையிலான முன்னணி கால்பந்து தொடர் சந்தோஷ் டிராபி. கடந்த 1941ல் துவங்கப்பட்டது. இதன் 78 வது சீசன் கடந்த நவம்பர் 15ல் துவங்கியது. 38 அணிகள் களமிறங்கின. இந்தியாவின் 10 இடங்களில் போட்டிகள் நடந்தன. பைனல் சுற்றில் 'பி' பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி, கடைசி இடம் பிடித்து, காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. மணிப்பூர், சர்வீசஸ் அணிகள் அரையிறுதியுடன் வெளியேறின. நேற்று ஐதராபாத்தில் நடந்த பைனலில் 7 முறை சாம்பியன் ஆன கேரளா, 32 முறை சாதித்த மேற்கு வங்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இரண்டாவது பாதியிலும் இழுபறி நீடித்தது. இதனால் போட்டி கூடுதல் நேரத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனிடையே இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தின் கடைசி நிமிடத்தில் மேற்கு வங்க வீரர் ராபி ஹன்ஸ்டா ஒரு கோல் அடித்தார். முடிவில் மேற்கு வங்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது.33 வது முறைசந்தோஷ் டிராபி தொடரில் மேற்கு வங்க அணி 33 வது முறை கோப்பை வென்று அசத்தியது. அதிக முறை கோப்பை வென்ற அணி வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. 8 முறை சாதித்த பஞ்சாப், இரண்டாவதாக உள்ளது. கேரளா (7), சர்வீசஸ் (7) அணிகள் அடுத்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ