மேலும் செய்திகள்
ஆசிய கூடைப்பந்து * இந்திய அணி ஏமாற்றம்
25-Feb-2025
ஷில்லாங்: ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி, இன்று வங்தேசத்தை சந்திக்கிறது.ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று இன்று துவங்குகிறது. 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம். உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இன்று ஷில்லாங்கில் (மேகாலயா) நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, 185 வது இடத்திலுள்ள வங்கதேசத்தை சந்திக்கிறது. கேப்டன் பலம்இந்திய அணியில் மீண்டும் கேப்டன் சுனில் செத்ரி களமிறங்குவது, சக வீரர்களுக்கு உற்சாகம் தந்துள்ளது. தவிர, 2022 உலக கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 2 கோல் அடித்து, வங்கதேசத்தை வீழ்த்த உதவினார். இது மீண்டும் தொடரலாம். சாங்டே, பிரண்டன் பெர்ணான்டஸ் காயத்தால் அவதிப்படுவது சிக்கலாக உள்ளது. வங்கதேசம் எப்படிதரவரிசையில் பின் தங்கி இருந்தாலும், வங்கதேச அணி வெற்றியை எளிதில் விட்டுத்தராது. வங்கதேச அணியின் 'மெஸ்ஸி' என்றழைக்கப்படும் ஹம்சா சவுத்துரி, இன்று விளையாடுவது, கூடுதல் பலம். இங்கிலீஷ் பிரிமியர் தொடரில் பங்கேற்கும் இவர், ஆசிய கோப்பை போட்டிக்காக வந்துள்ளார். இவருடன் கேப்டன் ஜமால் புயன், 20 வயது வீரர் அல் அமின், இந்தியாவுக்கு நெருக்கடி தரலாம்.யார் ஆதிக்கம்இரு அணிகள் 16 போட்டியில் மோதின. இந்தியா 8ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 7 போட்டி 'டிரா' ஆனது. 2003 தெற்காசிய விளையாட்டு அரையிறுதியில் மட்டும் வங்கதேசம் வெற்றி பெற்றது.
25-Feb-2025