உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / மைதானத்தில் மின்னல்... கால்பந்து வீரர் மரணம்

மைதானத்தில் மின்னல்... கால்பந்து வீரர் மரணம்

லிமா: மைதானத்தில் மின்னல் தாக்கியதால் கால்பந்து வீரர் மரணம் அடைந்தார்.பெருவில் உள்ளூர் கால்பந்து போட்டி நடக்கிறது. இங்குள்ள சில்காவின் கோடோ கோடோ மைதானத்தில் நடந்த போட்டியில் ஜுவன்டட் பெலாவிஸ்டா, பெமிலியா சோக்கா அணிகள் மோதின. இதில் பெலாவிஸ்டா அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. அப்போது ஏற்பட்ட புயல், மழை காரணமாக, 22வது நிமிடத்தில் போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர். திடீரென ஹியுகோ டி லா கிரஸ் 39, என்ற வீரர் மீது மின்னல் தாக்கியது. அடுத்த சில விநாடிகளில் கருகி கீழே சரிந்தார் ஹியுகோ. அருகில் நடந்த வந்த கோல் கீப்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற வீரர்கள் அப்படியே மைதானத்தில் குப்புற விழுந்தனர். இதை போட்டியை ஒளிபரப்பு செய்த டிவி நிறுவனம் பதிவு செய்தது. பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹியுகோ, வழியில் மரணம் அடைந்தார். அபாய கட்டத்தை தாண்டிய கோல் கீப்பர் உட்பட இரு வீரர்கள் சிகிச்சையில் உள்ளனர். மற்ற இரு வீரர்கள் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை