உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: பைனலில் போர்ச்சுகல் * கைகொடுத்த ரொனால்டோ

கால்பந்து: பைனலில் போர்ச்சுகல் * கைகொடுத்த ரொனால்டோ

முனிக்: ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறியது போர்ச்சுகல். அரையிறுதியில் 2-1 என ஜெர்மனியை வீழ்த்தியது.ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக 'நேஷன்ஸ் லீக்' தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. போர்ச்சுகல், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறின. ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த அரையிறுதியில் கிறிஸ்டியானோ ரோனால்டோவின் போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி துவங்கியதும் ஜெர்மனி அணிக்கு விர்ட்ஸ் (48) கோல் அடித்தார். 63வது நிமிடம் போர்ச்சுகல் வீரர் கன்செய்காவோ ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. 68 வது நிமிடத்தில் மெண்டஸ் கொடுத்த பந்தை பெற்ற ரொனால்டோ, வலது காலால் பந்தை உதைத்து கோலாக மாற்றினார். முடிவில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் ஸ்பெயின் அல்லது பிரான்சை (ஜூன் 8) சந்திக்க உள்ளது.937 கோல்ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் 40 வயது ரொனால்டோ, ஒரு கோல் அடித்தார். இது இவரது 937வது கோல் ஆனது. இதில் போர்ச்சுகல் அணிக்காக மட்டும் 220 போட்டியில் 137 கோல் அடித்துள்ளார். தவிர கிளப் அரங்கில் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்காக 5 கோல் அடித்தார். அடுத்து மான்செஸ்டர் யுனைடெட் (145 கோல்), ரியல் மாட்ரிட் (450), யுவன்டஸ் (101), அல் நாசர் (99) அணிகளுக்காக என மொத்தம் 800 கோல் அடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !