உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / பிரான்ஸ்-நெதர்லாந்து டிரா: யூரோ கால்பந்து போட்டியில்

பிரான்ஸ்-நெதர்லாந்து டிரா: யூரோ கால்பந்து போட்டியில்

லெய்ப்ஜிக்: பிரான்ஸ், நெதர்லாந்து அணிகள் மோதிய 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.ஜெர்மனியில் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லெய்ப்ஜிக் நகரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-2' பிரான்ஸ் அணி, 7வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் மூக்கில் காயமடைந்த பிரான்ஸ் அணி கேப்டன் எம்பாப்வே, இப்போட்டியில் பங்கேற்கவில்லை. கிரீஸ்மென் அணியை வழிநடத்தினார்.முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஏமாற்றிய கிரீஸ்மென், 65வது நிமிடத்தில் கிடைத்த கோல் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இந்நிலையில் 69வது நிமிடத்தில் நெதர்லாந்தின் சேவி சைமன்ஸ் ஒரு கோல் அடித்தார். ஆனால் நெதர்லாந்தின் டென்சல் டம்பிரைஸ், பிரான்ஸ் கோல்கீப்பரை தடுத்தாகவும், 'ஆப்-சைடு' என்றும் 'வார்' தொழில்நுட்ப உதவியுடன் கோல் திரும்ப பெறப்பட்டது. கடைசி வரை போராடிய இரு அணியினரால் கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் போட்டி 0-0 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

போலந்து 'அவுட்'

'டி' பிரிவில் தலா 4 புள்ளிகளுடன் நெதர்லாந்து, பிரான்ஸ் அணிகள் முதலிரண்டு இடத்தில் உள்ளன. ஆஸ்திரியா (3 புள்ளி) 3வது இடத்தில் உள்ளது. இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்த போலந்து, 'ரவுண்டு-16' வாய்ப்பை இழந்து வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை