மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
புதுடில்லி: இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் நட்பு கால்பந்து போட்டியில் மோத உள்ளன.இந்திய பெண்கள் கால்பந்து அணி பங்கேற்கும் போட்டி குறித்த விபரம் வெளியானது. இதன் படி உலகத் தரவரிசையில் 66 வது இடத்திலுள்ள இந்திய அணி, 48 வது இடத்திலுள்ள உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டி கொண்ட நட்பு கால்பந்தில் பங்கேற்க உள்ளது. இப்போட்டிகள் மே 31, ஜூன் 4ல் தாஷ்கென்ட்டில் நடக்கவுள்ளன. முன்னதாக இரு அணிகள் கடைசியாக மோதிய ஒலிம்பிக் தகுதி போட்டியில் இந்திய அணி 0-3 என உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.தற்போது நட்பு போட்டியில் பங்கேற்க உள்ள 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அன்ஷிகா, மைபம் தேவி, மோனலிஷா உள்ளிட்டோர் கோல்கீப்பர்களாக இடம் பெற்றனர். ஷில்கி தேவி, ஆஷாலதா, கீர்த்தினா தேவி தற்காப்பு வீராங்கனைகளாக தேர்வாகினர். மத்திய களத்தில் அஞ்ச தமாங், கார்த்திகா அங்கமுத்து, பிரியங்கா தேவி, பவித்ரா முருகேசன், முன்கள வீராங்கனைகளாக தமிழகத்தின் சந்தியா, நேஹா, மணிஷா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான பயிற்சி முகாம் மே 16ல் ஐதராபாத்தில் துவங்குகிறது. இந்திய அணியினர் மே 29ல் உஸ்பெகிஸ்தான் கிளம்பிச் செல்லவுள்ளனர்.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025