உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / சென்னை அணியில் எல்சினோ

சென்னை அணியில் எல்சினோ

சென்னை: சென்னை கால்பந்து அணியில் பிரேசில் வீரர் எல்சினோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதில் 2015, 2017-18 என இரு முறை கோப்பை வென்ற அணி சென்னை. கடந்த 2023-24 சீசனில், ஆறாவது இடம் பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. தற்போது அடுத்த சீசனுக்கான (2024-25) வீரர்கள் ஒப்பந்தம் நடந்து வருகிறது. சமீபத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மத்திய கள வீரர் ஜிதேந்திரா சிங் 22, ஒப்பந்தம் ஆனார். நேற்று பிரேசில் கால்பந்தின் தற்காப்பு வீரர் எல்சன் ஜோஸ் டயாஸ் என்ற எல்சினோ 33, இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013 முதல் கிளப் போட்டிகளில் பங்கேற்கிறார். 2017-19 இடைவெளியில் 136 போட்டியில் பங்கேற்றார். மொத்தம் 214 போட்டியில் களமிறங்கிய எல்சினோ 15 கோல் அடித்தார். 2 கோல் அடிக்க கைகொடுத்தார். 2022-24ல் ஜாம்ஷெட்பூர் அணிக்காக (25 போட்டி) விளையாடியுள்ளார். பயிற்சியாளர் ஓவன் கோயல் கூறுகையில்,'' சென்னை அணியின் மத்திய கள, தற்காப்பு பகுதிக்கு எல்சினோ பொருத்தமான வீரராக இருப்பார். எதிரணி பகுதியில் கோல் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதில் வல்லவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை