மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
கெல்சன்கிர்சென்: 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என இத்தாலியை வீழ்த்தியது.ஜெர்மனியில், 'யூரோ' கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-8' ஸ்பெயின் அணி, 10வது இடத்தில் உள்ள 'நடப்பு சாம்பியன்' இத்தாலி அணியை சந்தித்தது.ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ் அடித்த பந்து, இத்தாலி கோல்கீப்பர் ஜியான்லுாகி டோனாரும்மா கையில் பட்டு திரும்பியது. இதை இத்தாலியின் ரிக்கார்டோ கலாபியோரி வெளியே தள்ள முயற்சித்தார். ஆனால் பந்து, அவரது காலில் பட்டு வலைக்குள் சென்று 'சேம்சைடு' கோல் ஆனது. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என 2வது வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் குரோஷியாவை வென்ற ஸ்பெயின், 6 புள்ளிகளுடன் 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறியது.
'யூரோ' கோப்பையில் 18 போட்டிகளின் முடிவில் (ஸ்பெயின்-இத்தாலி), 47 கோல் பதிவாகின. இதில் 5 'சேம்சைடு' கோல் அடங்கும். கடந்த சீசனில் (2021) அதிகபட்சமாக 11 'சேம்சைடு' கோல் அடிக்கப்பட்டன.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025