உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / மெக்சிகோ அணி சாம்பியன்: கோல்டு கப் கால்பந்தில் கலக்கல்

மெக்சிகோ அணி சாம்பியன்: கோல்டு கப் கால்பந்தில் கலக்கல்

ஹூஸ்டன்: 'கான்ககப் கோல்டு கப்' கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி சாம்பியன் பட்டம் வென்றது.கனடா, அமெரிக்காவில், 'கான்ககப் கோல்டு கப்' கால்பந்து 18வது சீசன் நடந்தது. அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த பைனலில் அமெரிக்கா, மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் அமெரிக்காவின் ரிச்சர்ட்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 27வது நிமிடத்தில் மெக்சிகோவின் ரால் ஜிமெனெஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் அசத்திய மெக்சிகோவின் எட்சன் அல்வாரெஸ் 77 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதற்கு அமெரிக்க அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மெக்சிகோ அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 10வது முறையாக கோப்பை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ