மேலும் செய்திகள்
அரையிறுதியில் செல்சி: கிளப் உலக கால்பந்தில்
05-Jul-2025
ஈஸ்ட் ரூதர்போர்டு: கிளப் உலக கோப்பை கால்பந்து பைனலுக்கு பி.எஸ்.ஜி., அணி முன்னேறியது. அரையிறுதியில் 4-0 என, ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.அமெரிக்காவில், உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு செல்சி (இங்கிலாந்து) அணி ஏற்கனவே முன்னேறியது.ஈஸ்ட் ரூதர்போர்டில் நடந்த 2வது அரையிறுதியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், பிரான்சின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிகள் மோதின. இதில் பி.எஸ்.ஜி., அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தது. பி.எஸ்.ஜி., அணிக்கு பேபியன் ரூயிஸ் (6, 24வது நிமிடம்), மசூர் டெம்பேலே (9வது), ரமோஸ் (87வது) கைகொடுத்தனர்.ஈஸ்ட் ரூதர்போர்டில், ஜூலை 13ல் நடக்கவுள்ள பைனலில் செல்சி, பி.எஸ்.ஜி., அணிகள் மோதுகின்றன.
05-Jul-2025