உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ரொனால்டோ 2: போர்ச்சுகல் வெற்றி

ரொனால்டோ 2: போர்ச்சுகல் வெற்றி

லிஸ்பன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடித்து கைகொடுக்க போர்ச்சுகல் அணி 3-0 என அயர்லாந்தை வீழ்த்தியது.ஜெர்மனியில், 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் (ஜூன் 14 - ஜூலை 14) நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக நட்பு ரீதியிலான போட்டிகள் நடக்கின்றன. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்த போட்டியில் போர்ச்சுகல், அயர்லாந்து அணிகள் மோதின. பின்லாந்து, குரோஷியாவுக்கு எதிராக ஓய்வு வழங்கப்பட்டிருந்த போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இப்போட்டியில் பங்கேற்றார்.ஜோவோ பெலிக்ஸ் (18வது நிமிடம்) கைகொடுக்க முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் அசத்திய ரொனால்டோ 50, 60வது நிமிடத்தில் கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய அயர்லாந்து அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.ஸ்பெயினின் முர்சியாவில் நடந்த போட்டியில் வடக்கு அயர்லாந்து, அன்டோரா அணிகள் மோதின. பிராட்லி (16, 23வது நிமிடம்) கைகொடுக்க வடக்கு அயர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.சிலியில் நடந்த போட்டியில் ஏமாற்றிய பராகுவே அணி 0-3 என சிலியிடம் தோல்வியடைந்தது. சிலி அணிக்கு விக்டர் டேவில்லா (17, 37 வது நிமிடம்), எட்வர்டோ வர்காஸ் (53வது) கைகொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை