உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: ஹரியானா கலக்கல்

கால்பந்து: ஹரியானா கலக்கல்

புதுடில்லி: பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் ஹரியானா, ஒடிசா, மணிப்பூர் அணிகள் வெற்றி பெற்றன. இந்தியாவில் சீனியர் பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 30 அணிகள் களமிறங்கின. 'குரூப் ஸ்டேஜ்' முடிவில் மொத்தம் 12 அணிகள் பைனல் சுற்றுக்கு முன்னேறின. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நேற்று 'பி' பிரிவு போட்டிகள் நடந்தன. ஹரியானா அணி 5-0 என்ற கணக்கில் சிக்கிம் அணியை வீழ்த்தியது. மணிப்பூர் அணி 3-0 என மஹாராஷ்டிரா அணியை சாய்த்தது. மற்றொரு போட்டியில் ஜார்க்கண்ட் கால்பந்து அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியிடம் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை