உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா

தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா

கொழும்பு: தெற்காசிய கால்பந்து (17 வயது) பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. அரையிறுதியில் 3-0 என, நேபாளத்தை வென்றது.இலங்கை தலைநகர் கொழும்புவில், 17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 10வது சீசன் நடக்கிறது. அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.அபாரமாக ஆடிய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இந்திய அணிக்கு குன்லீபா (61வது நிமிடம்), அஸ்லான் ஷா (80வது), டயமண்ட் சிங் (90+4வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.பைனலில் (செப். 27) இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை