உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / பயிற்சியாளராக விரும்பிய ஹெர்னாண்டஸ் * இந்திய கால்பந்து அணிக்கு...

பயிற்சியாளராக விரும்பிய ஹெர்னாண்டஸ் * இந்திய கால்பந்து அணிக்கு...

புதுடில்லி: இந்திய கால்பந்து அணி பயிற்சியாளராக ஸ்பெயினின் மனோலோ மார்கஸ் 56, இருந்தார். இவரது பயிற்சியில், இந்தியா பங்கேற்ற 8 போட்டியில் 4 'டிரா' செய்து, 3ல் தோற்றது (1 வெற்றி). தரவரிசையில் பின் தங்கிய வங்கதேசம், ஹாங்காங் அணிக்கு எதிராக தோற்ற இந்தியா, 2027 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது. தரவரிசையில், கடந்த 2018ல் 97வது இடத்தில் இருந்த இந்திய அணி, கடந்த 9 ஆண்டில் இல்லாத அளவுக்கு மோசமாக, 133 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து மார்கஸ் பதவி விலகினார். புதிய பயிற்சியாளர் பதவிக்கு 170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவின் காலித் ஜமில், முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) என இருவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளது. திடீர் திருப்பம்தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2008, 2012ல் யூரோ, 2010ல் உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணியின் மத்திய கள 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படும் ஜாவி ஹெர்னாண்டஸ் 45, தனது 'இ-மெயில்' வழியாக, இந்திய அணி பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளார். தவிர, லா லிகா தொடரில் 5, கோபா டெல்ரே 3 உட்பட பல்வேறு கோப்பை வென்ற பார்சிலோனா அணிக்காக 24 ஆண்டு விளையாடியுள்ளார். கத்தாரின் அல் சாத் (2019-2021), பார்சிலோனா (2021-2024) அணி பயிற்சியாளராக இருந்தார். இவரது விருப்பம், இந்திய கால்பந்து கூட்டமைப்பை வியப்படைய செய்துள்ளது. கோரிக்கை நிராகரிப்புஇந்திய கால்பந்து, மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் ஜாவி ஹெர்னாண்டஸ் போன்ற முன்னணி வீரர் ஒருவர் ஆர்வம் காட்டியது வியப்பாக இருந்தது. ஆனால், அதிக பணம் தேவைப்படும் என்பதால், இந்திய கால்பந்து கூட்டமைப்பு, இவரது விண்ணப்பத்தை கண்டு கொள்ளவில்லை. இது பலருக்கும் ஆச்சரியம் தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி