அங்கிதா தியானி தேசிய சாதனை: 2000 மீ., ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில்
ஜெருசலேம்: இந்தியாவின் அங்கிதா தியானி, 2000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார்.இஸ்ரேலில், ஜெருசலேம் கிராண்ட்ஸ்லாம் தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 2000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் இந்தியாவின் அங்கிதா தியானி 23, பங்கேற்றார். பந்தய துாரத்தை 6 நிமிடம், 13.92 வினாடியில் கடந்த அன்கிதா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், 2000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் இலக்கை அதிவேகமாக கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன், இந்திய வீராங்கனை பருல் சவுத்தரி இலக்கை 6 நிமிடம், 14.38 வினாடியில் கடந்தது தேசிய சாதனையாக இருந்தது.உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அன்கிதா தியானி. பாரிஸ் ஒலிம்பிக் (2024) 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இவர், ஆசிய சாம்பியன்ஷிப் (2023, வெண்கலம், 5000 மீ.,), ஆசிய உள்ளரங்கு சாம்பியன்ஷிப் (2024, வெள்ளி, 3000 மீ.,), உலக பல்கலை., விளையாட்டில் (2025, வெள்ளி, 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்') பதக்கம் வென்றுள்ளார்.