வில்வித்தை: பைனலில் இந்தியா
தாகா: வங்கதேசத்தின் தாகாவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி, காலிறுதியில் 159-155 என வியட்நாமை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின.இதில் இந்திய அணி 156-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.'ரீகர்வ்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அன்ஷிகா குமாரி, யாஷ்தீப் சஞ்சய் ஜோடி, 0-6 என சீன தைபே ஜோடியிடம் தோல்வியடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை தென் கொரியாவை சந்திக்க உள்ளது.