உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஷீத்தல் தேவி நம்பர்-1 * பாரா உலக வில்வித்தையில் அபாரம்

ஷீத்தல் தேவி நம்பர்-1 * பாரா உலக வில்வித்தையில் அபாரம்

பாங்காக்: தாய்லாந்தில் மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் பாரா உலக வில்வித்தை சீரிஸ் நடக்கிறது. நேற்று பல்வேறு பிரிவுகளில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. காம்பவுண்டு பெண்கள் பிரிவில் இந்தியாவின் இரு கைகள் இல்லாத ஷீத்தல் தேவி, மொத்தம் 698 புள்ளிகள் எடுத்து 'நம்பர்-1' இடம் பிடித்தார். பயல் நாக் (678) 3, ஜோதி (672) 5, சரிதா (669) 6வது இடம் பெற்றனர். ஒட்டுமொத்தமாக ஷீத்தல் தேவி, பயல் நாக் ஜோடி 1376 புள்ளியுடன் தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்தது. காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் இந்தியாவின் தோமன், 689 புள்ளி எடுத்து 2வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்கள் ஷ்யாம் சுந்தர் (686) 3, ராகேஷ் (686) 5, விவேக் (684) 7வது இடம் பெற்றனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் தோமன், ஷ்யாம் சுந்தர் ஜோடி 1375 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. கலப்பு அணிகளுக்கான பிரிவில் ஷீத்தல் தேவி, தோமன் ஜோடி, 1387 புள்ளியுடன் முதலிடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை