உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தையில் இந்திய பெண்கள் அணி பைனலுக்கு முன்னேறியது. சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ் 2' நடக்கிறது. பெண்கள் ரிகர்வ் அணிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் அங்கிதா, கும்கும், தீபிகா இடம் பெற்ற அணி பங்கேற்கிறது. காலிறுதியில் இந்திய அணி, 5-4 என வியட்நாமை வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, ஒலிம்பிக்கில் 10 முறை தங்கம் வென்ற, வலிமையான தென் கொரியாவை எதிர்கொண்டது. மூன்றாவது செட் முடிவில் இந்திய அணி 5-1 என்ற முன்னிலையுடன் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் சீனாவை எதிர்கொண்டது. ஆண்கள் ரிகர்வ் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தருண்தீப் ராய், திராஜ் பொம்மதேவரா, யாஷ்தீப் இடம் பெற்ற அணி 2-6 என வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆதித்தி, ஓஜாஸ் ஜோடி 156-157 என்ற கணக்கில் தோற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை